Search This Blog

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 23.11.18
திருக்குறள்


அதிகாரம்:செய்ந்நன்றியறிதல்

திருக்குறள்:103

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.
விளக்கம்:


இவருக்கு உதவினால் பிறகு நமக்கு இது கிடைக்கும் என்று எண்ணாதவராய் ஒருவர் செய்த உதவியின் அன்பை ஆய்ந்து பார்த்தால், அவ்வுதவியின் நன்மை கடலைவிடப் பெரியது ஆகும்.

பழமொழி

A penny saved is a penny gained

சிறுதுளி பெருவெள்ளம்

இரண்டொழுக்க பண்புகள்

* என் உடன் பயிலும் மாணவ,மாணவிகளுடன்  எந்த வேறுபாடும் இன்றி அன்போடு பழகுவேன்.

* பிற மாணவர்கள் வைத்து இருக்கும் பொருள்கள் மீது ஆசை படவோ அவற்றை எடுத்துக்கொள்ளவோ மாட்டேன்.

 பொன்மொழி

நல்ல நூல்கள் கூறும் கருத்துக்களையும், பெரியோர் கூறும் அறிவுரைகளையும் உள்ளத்தில் வைத்து காத்தல் வேண்டும்.
   - ஔவையார்
          
பொதுஅறிவு

1.சின்னச்சாமி விளையாட்டு அரங்கம் எந்த  நகரில் உள்ளது?

  பெங்களூரு ( கர்நாடகா)

2. விம்பிள்டன் கோப்பை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?

 டென்னிஸ்

தினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்

முளைகட்டிய பயறுகள்

1. முளைகட்டிய பயறுகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலுக்குத் தேவையான சக்தியை தருபவை. உடல் எடையைக் குறைக்கவும் உதவும்.

2. வைட்டமின் ஏ நிறைந்திருக்கிறது. கண்களுக்கு குளிர்ச்சி தந்து பார்வைத் திறனை மேம்படுத்தும்.

3. அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், ஹார்மோன்கள் சீராகச் சுரக்க வழிவகுக்கின்றன. புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றலைத் தருகின்றன.

4. இவற்றில் உள்ள பொட்டாசியம் உடலில் ரத்த ஓட்டம் சீராக உதவுகிறது; ரத்த விருத்திக்கும் உதவுகிறது. உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதயத்தில் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்படுவது போன்றவற்றைத் தடுக்கிறது. `அனீமியா’ என்னும் ரத்தசோகை நோயைத் தடுக்கிறது.

English words and meaning

Inure.   அனுபவப்படுத்து
Invade.    கைப்பற்றுதல்
Inward.    உட்புறம்
Intrinsic  உள்ளார்ந்த
Insolent  கர்வம்நிறைந்த

அறிவியல் விந்தைகள்

அறிவியல் அறிஞர்கள்
1 * புற்று நோய் மருந்தான ரேடியம் கண்டு பிடித்த மேரி க்யூரி அம்மையார் அவர்கள்தான் முதன் முதலில் இரண்டு முறை நோபல் பரிசு பெற்றவர்
2. விஞ்ஞானி ஐன்ஸ்டீன் அவர்கள் பள்ளியில் படிக்கும் போது மிகவும் படிப்பில் பின் தங்கி இருந்தார். ஆனால் பிற்காலத்தில் தலைசிறந்த விஞ்ஞானி ஆக மாறி அநேக கோட்பாடுகளைக் கண்டு பிடித்தார். இன்றும் அவரது மூளை பாதுகாக்கப் படுகிறது ஆராய்ச்சிக்காக.

நீதிக்கதை

வடைக்கு ஆசைப்பட்ட காகம் – விழியன்

பாட்டி அந்த காட்டுப் பாதையில் வடை சுட ஆரம்பித்தார். இரண்டு ஊருக்கு நடுவே ஒரு காடு. அந்த காட்டை கடப்பதற்கு ஒரு வழி இருக்கு. அங்க தான் பாட்டி கடையை போட்டாங்க. ஒரு நாள் ஒரு காக்காவுக்கு பயங்கர பசி. பாட்டி வடை சுடுவதை பார்த்துகிட்டே இருந்துச்சு. பாட்டிகிட்ட வந்து “பாட்டி பாட்டி எனக்கு ஒரு வடை தாங்களேன் என்றது. உன்னால என்ன பயன், உனக்கெல்லாம் தரமுடியாது காக்கா என்று சொல்லிவிட்டது.

ஒரு மரத்தின் மேலே போய் உட்கார்ந்துகொண்டது. அந்த பக்கம் நரி வந்தது. அடடே காகமே உன் வாயில் ஒரு வடை இருக்க வேண்டுமே எங்கே காணவில்லை என்று கிண்டலடித்தது. அட போங்க நரியண்ணா, எனக்கோ பசி, பாட்டி என்னால் என்ன பயன், வடை எல்லாம் தரமுடியாதுன்னு சொல்லிட்டாங்க. அப்படியா சொல்லிட்டாங்க ஒரு கை பார்த்திடலாம் வா என காகத்தை அழைத்தது. தூரத்தில் பாட்டி வேர்த்து வியர்த்து வடை சுட்டுக்கொண்டிருந்தார்கள். காட்டுப் பகுதி என்பதால் குடிசை கூடப் போடவில்லை. வெயிலில் தான் அமர்ந்து இருந்தார்கள்.

நரி யோசித்தது. காகத்திடம் “உன்னால் இலைகளைப் பறித்து வரமுடியுமா?” என்று கேட்டது. “ஓ எத்தனை வேண்டும்” என்றது காகம். “எவ்வளவு முடியுமோ அவ்வளவு” என்றது நரி. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு…நாற்பது, அறுபது… நூறு. நூறு இலைகளைப் பறித்துக்கொண்டு வந்தது காகம். பெரிய இலைகளை கீழே வைத்து அதன் மீது சின்ன இலைகளை எல்லாம் தைத்தது நரி. கொஞ்ச நேரத்தில் பெரிய குடையாக விரிந்தன அந்த இலைகள். ஆமாம! நரி பாட்டிக்கு இலைகளைக்கொண்டும், கிளைகளைக்கொண்டும் பெரிய குடையை செய்துவிட்டது.

பாட்டியிடம் கொடுத்ததும் பாட்டிக்கு சந்தோஷம் தாங்கவில்லை. குடை நிறைய நிழலினைக் கொடுத்தது. "வடை கேட்ட காகம் நீதானே?" என்றார் பாட்டி. "ஆமாம் பாட்டி! பசியுடன் உங்களுக்காக இத்தனை இலைகளையும் காகம் எடுத்து வந்தது" என்றது நரி. "அடடே! பசின்னு கேட்டப்பவே வடை கொடுத்திருக்க வேண்டும். இந்தாங்க ரெண்டு பேரும் வடை சாப்பிடுங்க" என்று பாட்டி வடைகளை கொடுத்தாங்க. ஆளுக்கு ஒரு வடை இல்லை. நான்கு நான்கு வடை.

அய்யோடா! எப்படி இத்தனை வடையை சாப்பிடறதுன்னு காகமும் நரியும் யோசித்தன. நரி தன்னுடைய பங்கில் இருந்து இன்னொரு வடையையும் காகத்திற்கு கொடுத்தது. "உன்னால தான் எனக்கு வடை கிடைத்தது, வெச்சிக்கோ"என்று சொல்லிவிட்டு வடை சாப்பிட்டுக்கொண்டே பாட்டு பாடிக்கிட்டு போயிடுச்சு. காக்கா என்ன செய்தது தெரியுமா? “கா..கா..கா”ன்னு தன் சகாக்களை எல்லாம் கூப்பிட்டு எல்லோரும் சேர்ந்து, அந்த ஐந்து வடைகளையும் காலி செய்தார்கள்.
 தினமும் காகமும், நரியும் பாட்டிகிட்ட இருந்து வடை வாங்கி சாப்பிட ஆரம்பித்துவிட்டன. ரெண்டு பேரும் பாட்டிகிட்ட வேலைக்கு சேர்ந்துட்டாங்க.

 இன்றைய செய்திகள்
23.11.18.                    

* அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியின் சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* எஸ்டாப் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாகியாக இருந்து வந்த அபிஜித் போஸ் வாட்ஸ்-அப் நிறுவனத்தின் இந்திய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* இந்தோனேசியாவில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 6 கிலோ பிளாஸ்டிக்: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சி.

* உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன் போட்டியின் 48 கிலோ எடைப்பிரிவு லைட் பிளைவெயிட் இறுதிச்சுற்றுக்கு இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மேரி கோம் தகுதி பெற்றுள்ளார்.

* இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!

Today's Headlines

🌹 The Indian Meteorological Survey says that there  may cause heavy rainfall in some parts of Tamil Nadu and Puducherry over the next 24 hours.

🌹 Abhijit Bose has been appointed as the India's WhatsApp President who was Co- founder and CEO of ESTOP company

🌹6 kg plastic in the stomach of the docked whale in Indonesia: environmental activists shock.

🌹Mary Kom qualifies  for finals in the 48 kg weightlift lightweight event of the World Women's Boxing Championship.

🌹 Test series against India the Australian team was announced

No comments:

Post a Comment