Search This Blog

Flash News: TRB Exam 2019 - Date அடுத்தமாதம் அறிவிக்கப்பட்டும் - அமைச்சர் செங்கோட்டையன்.

டிஆர்பி  தேர்வு தேதி அடுத்த மாதம்அறிவிக்கப்பட்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வழங்கப்படும்.

மாணவர்களின் தற்கொலையைத் தடுக்க தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஆலோசனை மையம் அமைக்கப்படும்.

அமைச்சர்செங்கோட்டையன்.

ஆசிரியர்கள் கூட்டுறவு நாணய சிக்கன சங்கத்தின் ஒரு நொடியில் கடன் தொகை பிடித்தம் கணக்கீடு-Teachers Society Loan CalculatorTeachers Society Loan Calculator - Mr S.Vinoth Kumar

  • *ஒரு நொடியில் கடன் தொகை பிடித்தம் கணக்கீடு* செய்யும் வகையில் அனக்காவூர் ஆசிரியர்கள் கூட்டுறவு நாணய சிக்கன சங்கத்தின் உறுப்பினர்களின் பயன்பாட்டிற்கு.... மேற்கண்ட *எக்ஸல்* பதிவினை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்...

  உள்ளீடு செய்யும் முறை
1. நீல நிற கட்டத்தில் வாங்கிய மொத்த கடன் தொகையினை உரிய மாதத்தில் ஒரே ஒரு முறை மட்டும் பதிவு செய்யவும்
2. மஞ்சள் நிற கட்டத்தில் மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும் *அசல்* தொகையினைப் பதிவு செய்யவும்.( ஒவ்வொரு மாதமும் பதிவு செய்ய வேண்டும்)
இப்பொழுது வட்டி (11.5%)மற்றும் மாத இறுதி கடன் நிலுவைத் தொகை கணக்கிடப்பட்டு மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகையினை அறியலாம்.
நன்றி....
சு. வினோத்குமார்
ஊ. ஒ. ந. நி. பள்ளி அளத்துறை. திருவண்ணாமலை மாவட்டம்

9 மாவட்டங்களுக்கு கனமழை - மஞ்சள் அலெர்ட் அறிவிப்பு!


தென் மேற்கு பருவ மழை, இந்த மாதம் 21 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து 26 ஆம் தேதி முதல்  வட கிழக்கு பருவ மழை தொடங்கும் என, எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், அன்று  வட கிழக்கில் இருந்து, பருவ காற்று வீச தொடங்கயது, ஆனால் மழை தொடங்கவில்லை.

இந்நிலையில், பருவ காற்று வலுவடைந்துள்ளதால், இந்த வாரம், கட்டாயம் மழை துவங்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. இதன்படி, நேற்று முதல், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், லேசான சாரல் மழை தொடங்கியுள்ளது..வடகிழக்கு பருவ மழை, இன்று முதல் தீவிரம் அடைந்து, கடலோர மாவட்டங்களில் கன மழை கொட்டும் என, கூறப்படுகிறது.  மேலும், நாளையும், நாளை மறுநாளும் மழை நீடிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இது தொடர்பாக  இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், 'தமிழகம், புதுச்சேரி, கேரளா மற்றும் ஆந்திராவில், வட கிழக்கு பருவ மழை, நாளைக்குள் தீவிரம் அடையும்' என, கூறப்பட்டுள்ளது.

வங்க கடலின் தென் மேற்கில், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. நாளைக்குள், வட கிழக்கு பருவ மழை தீவிரம் அடையும். சென்னையில், சில இடங்களில் மிதமான மழை பெய்யும். மாநிலம் முழுவதும், படிப்படியாக மழை அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே  , ஒன்பது மாவட்டங்களில் கன மழை பெய்யும் என, எச்சரிக்கப்பட்டு உள்ளது. காஞ்சிபுரம், கடலுார், விழுப்புரம், நாகை, திருவாரூர், அரியலுார், பெரம்பலுார் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில், சில இடங்களில், 11 செ.மீ., வரை மழை பெய்யும் என, மஞ்சள், 'அலர்ட்' அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் தனியார் வானிலை ஆய்வு கணிப்புகளில்  திருவள்ளூர் மாவட்டத்தில், கன மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது

சர்வதேச தரத்தில் மாணவர் அடையாள அட்டை QR CODE தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாணவர் அடையாள அட்டை

அடையாள அட்டையின் சிறப்பம்சங்கள்தனித்தனியாக  உள்ள QR CODE ஒவ்வொன்றையும்
SCAN செய்தால்
1.மாணவர் சுயவிவரம்
2.பள்ளி இணையதளம்
3.பள்ளி YOUTUBE CHANNEL
4.HOME WORK UPDATION DETAIL
5.INDIVIDUAL SKILLS & PROJECTS UPDATION.

இரா.கோபிநாத்
இடைநிலை ஆசிரியர்
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒண்டிக்குப்பம்
9578141313
கடம்பத்தூர் ஒன்றியம்
திருவள்ளூர் மாவட்டம்

ஒரே மாதிரியான திருமண வயதுக்குப் பரிந்துரை..குழந்தை திருமணத்தை தடுக்கும் வகையில், ஆணுக்கும், பெண்ணுக்கும், ஒரே மாதிரியான திருமண வயதை நிர்ணயிக்க வேண்டும்' என, தேசிய மனித உரிமை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.ந்தை திருமணம் தொடர்பாக, தேசிய மனித உரிமைகள் ஆணையம் சார்பில், இரண்டு நாள் கருத்தரங்கம், கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடந்தன. அதன் முடிவில், பல்வேறு பரிந்துரைகளை, ஆணையம் பட்டியலிட்டு உள்ளது. மத்திய சட்ட அமைச்சகம், குழந்தைகள் மற்றும் பெண்கள் நல அமைச்சகம் ஆகியவற்றுக்கு, இந்தப் பரிந்துரைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன; அதில் கூறப்பட்டுள்ளதாவது: சட்டத்தின்படி, ஆணுக்கான திருமண வயது, 21 ஆகவும், பெண்ணுக்கான திருமண வயது, 18 ஆகவும் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன், இந்த வயது நிர்ணயிக்கப்பட்டது.தற்போதுள்ள காலத்தில், ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையேயான திருமண வயதில் வேறுபாடுகள் இருக்கக் கூடாது. இருவருக்கும் பொதுவான, ஒரே திருமண வயதை நிர்ணயிக்க வேண்டும். குழந்தை திருமணத்தை தடுப்பதற்கு இது உதவும். கர்நாடகாவில் உள்ளதுபோல், ஒவ்வொரு கிராமத்துக்கும், ஒரு குழந்தை திருமணம் தடுப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும்.


இவ்வாறு பல்வேறு பரிந்துரைகள், அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.'ஆண் மற்றும் பெண்ணுக்கான, திருமண வயதை, 18 ஆக நிர்ணயிக்கலாம்' என, 2008ல், மத்திய சட்ட கமிஷன் பரிந்துரை செய்திருந்தது

48 பள்ளிகளுக்கு தூய்மை பாரத விருது


ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 48 பள்ளிகளுக்கு தூய்மை பாரத விருதுகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

மனித வள மேம்பாட்டு அமைச்சக வழிகாட்டுதலின்படி, தூய்மை பாரதம், தூய்மையான பள்ளி திட்டத்தின்கீழ், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 48 பள்ளிகளுக்கு தூய்மை பாரத விருதும், தலா ரூ. 5,000 காசோலை பரிசும் வழங்கப்பட்டது.
பள்ளிகளில் சுத்தமான குடிநீர் வழங்குதல், சுகாதாரமான முறையில் கழிப்பறை பராமரிப்பு, சுற்றுப்புறத் தூய்மை, சுத்தமாக கை கழுவி சுகாதாரமாக இருக்கும் குழந்தைகள், பள்ளிக்கு வெளியே சுற்றுப்புற தூய்மையை கடைப்பிடிக்கும் பள்ளிகளைத் தேர்வு செய்து இவ்விருது வழங்கப்பட்டது.
இதற்காக அந்தந்தப் பள்ளி நிர்வாகிகள் ஆன்லைன் மூலம் தங்கள் பள்ளியின் செயல்பாடுகளைப் பதிவு செய்தனர். அதில், சிறப்பாக செயல்பட்டதாக கண்டறியப்பட்ட 48 பள்ளிகளுக்கு இவ்விருது வழங்கப்பட்டது. தவிர, 5 ஆவது வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கான ஓவியப் போட்டியும், 6 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவிகளுக்கு கட்டுரைப் போட்டியும் நடத்தப்பட்டதில் தேர்வான 9 மாணவர்களுக்கு சான்றிதழும், ரூ. 500 மதிப்புடைய புத்தகங்களையும் ஆட்சியர் சி.கதிரவன் வழங்கினார். முதன்மைக் கல்வி அலுவலர் ரெ.பாலமுரளி உடனிருந்தார்

Flash News: 200க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய அதிரடி முடிவு200க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய அதிரடி முடிவுமாநிலம் முழுவதும் பகுதி நேர ஆசிரியர்களின் சான்றிதழ்களை மறு ஆய்வு செய்யவும் திட்டம்.

Source: புதிய தலைமுறை TV

தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் நேரம் நிர்ணயம்


தமிழகம் உள்ளிட்ட
தென் மாநிலங்களில் பட்டாசு வெடிக்க நேரம் நிர்ணயம்!
அதிகலை 4 - 5
இரவு 9 - 10
உச்சநீதிமன்றம் நிர்ணயம்

அறிவியல்-அறிவோம்: பட்டாசு ஓர் அறிவியல் பார்வை.பட்டாசு இல்லாத தீபாவளியா?. ஆனால், தரையில் இருந்து கிளம்பி புறப்பட்டு வானில் வர்ணஜாலம் நிகழ்த்தும் வண்ணப் பட்டாசுகள் உருவாக்கத்துக்கு பின்னால் இருக்கும் அறிவியலை அறிவீர்களா? அது பற்றி பார்ப்போம்.

சீனர்கள் தான் முதலில் பட்டாசை கண்டுபிடித்தவர்கள். கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே அவர்கள் பட்டாசுகளை பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். மூங்கில் தண்டில் கரித்தூளை நிரப்பி வெடிக்க வைத்ததே உலகின் முதல் பட்டாசு. அவற்றை வெடிக்க வைப்பதன் மூலம் கெட்ட ஆவிகளை விரட்டியடிக்க முடியும் என சீனர்கள் நம்பினார்கள்.
நவீன வண்ணப் பட்டாசுகள் இத்தாலியில் அறிமுகமாகின. இத்தாலியர்கள்தான் பட்டாசுகளில் வெடிபொருளோடு உலோக வண்ணமூட்டிகளைச் சேர்த்து வண்ணப் பட்டாசுகளைத் தயாரித்தனர். வண்ணத்திற்காக அவர்கள் உலோக உப்புகளைப் பயன்படுத்தினார்கள்.
அன்றில் இருந்து இப்போது வரை பட்டாசு தயாரிப்பில் நவீன முறைகள் புகுத்தப்பட்டு வருகின்றன.

இப்போது வண்ணப் பட்டாசு தயாரிப்பில் ஐந்து பொருள்கள் முக்கியமாகப் பயன்படுத்தப்படுகின்றன.

உலோக வண்ணமூட்டிகள், வெடிபொருள், வெடிபொருள் வெடிப்பதற்கான ஆக்சிஜனை வழங்கும் ஆக்ஸைடு, வண்ணங்களை அதிகம் வெளிப்படுத்த குளோரின் கலவை, இந்தப் பொருள்களை ஒன்றாக பாதுகாப்பாகச் சுற்றி வைக்க காகித அட்டை ஆகியவையே அந்த ஐந்து பொருள்கள் ஆகும்.

பட்டாசுகளில் சேர்க்கப்பட்ட உலோக வண்ணமூட்டிகளின் அளவுக்கு ஏற்பவும், குளோரின் கலவையின் அளவுக்கு ஏற்பவும் அவை வண்ணத்தையும் ஒளியையும் ஏற்படுத்துகின்றன. வண்ணமூட்டிகளாக பயன்படுத்தப்படும் ஒவ்வொரு உலோக உப்பிற்கும் பிரத்யேக வண்ணம் உள்ளது. பட்டாசு வெடிக்கும்போது அந்த வண்ணங்களை அவை பிரதிபலிக்கின்றன.

✨சிவப்பு வண்ணத்துக்கு ஸ்ட்ரோன்டியம் அல்லது லித்தியம் உலோக உப்பு பயன்படுத்தப்படுகிறது.

💥ஆரஞ்சு நிறத்துக்கு கால்சியமும்,

🔥மஞ்சள் நிறத்துக்கு சோடியமும் பயன்படுத்தப்படுகின்றன.

💥பேரியம் உப்பு பச்சை வண்ணத்தையும்,

💥தாமிர உப்பு நீல வண்ணத்தையும் வெளிப்படுத்துகின்றன.

💥ஊதா வண்ணத்துக்காக ஸ்ட்ரோன்டியமும் தாமிரமும் இணைந்து பயன்படுத்தப்படுகிறது.

⚡சில்வர் வண்ணத்துக்கு அலுமினியம், டைட்டானியம் அல்லது மெக்னீசியம் பயன்படுத்தப்படுகிறது.

🌟தங்க நிறத்துக்கு இரும்பு உப்பு சேர்க்கப்படுகிறது.
உலோக வண்ணமூட்டிகள் மிகக் கவனமாக பட்டாசுகளில் சேர்க்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட அலை நீளம் இருக்கிறது. அந்த அளவிற்கு ஏற்ப அவை வண்ணத்தையும் ஒளியையும் வெளியிடுகின்றன.

 ஒரே பட்டாசில் பல்வேறு வண்ணமூட்டிகள் சேர்க்கப்படுவதும் உண்டு. வாணவேடிக்கை இதற்கு நல்ல உதாரணம்.

நவம்பர்- 2018 மாத பள்ளி நாள் காட்டி

School Morning Prayer Activities - 31.10.2018 ( Daily Updates... )பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள்:76

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.

உரை:

அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்:ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்க்கும் அதுவே துணையாக நிற்கின்றது.

பழமொழி :

Delay of justice is injustice

தாமதிக்கப்பட்ட நீதி அநீதிக்குச் சமமாகும்

பொன்மொழி:

ஒருவன் என்றைக்கு
சிரிக்காமலே
இருக்கிறானோ,
அந்த நாள் தொலைந்து
போன நாளே.

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1..எந்த வருடம் முதல் பெண்கள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றனர்?
1908

2.கலைவாணர் பிறந்த ஊர்?
ஒழுகினசேரி

நீதிக்கதை

சேவலும் இரத்தினக் கல்லும்


அது ஒரு அழகிய பனிக்காலம். சேவல் ஒன்று வழக்கம் போல் காலையில் எழுந்து அதற்கான உணவைத்தேட தன் நண்பர்களுடன் கிளம்பியது. அந்த சேவல் தொலைவில் ஒரு குப்பைக் கிடங்கை கண்டது.

அந்த குப்பைக் கிடங்கில் ஏதாவது உணவு கிடைக்குமா என்ற எண்ணத்துடன் கிளற ஆரம்பித்தது. அப்போது அந்த சேவலுக்கு விலை மதிப்பில்லாத இரத்தினக்கல் ஒன்று கிடைத்தது.

அந்த கல்லை சேவல் திருப்பித் திருப்பிப் போட்டது. அதைக் கண்ட மற்றொரு சேவல் வருத்தமுடன் "இந்த கல் நமக்கு கிடைத்து என்ன பயன்? ஒரு இரத்தின வியாபாரியின் கையில் இது கிடைத்திருந்தால் அவனுக்கு இதன் மதிப்பு தெரியும். நமக்கோ இந்த கல்லை விட சிறிது தாணியம் கிடைத்திருந்தால் அதுவே விலை மதிப்பில்லாத பொருளாக இருக்கும்" இந்த கல் நமக்கு உதவாது என்று கூறியது.

நீதி: ஒருவருக்கு பயன்படும் பொருளே அவர்களுக்குச் சிறந்ததாகும்.


இன்றைய செய்தி துளிகள்:


1.எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள் ஏடிஎம்-ல் மாதத்திற்கு ரூ. 20,000 மட்டுமே எடுக்கும் முறை இன்று முதல் அமல்

2.புதுவையில் குடும்பத்துக்கு ரூ.1000 தீபாவளி பரிசு : முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

3.தமிழகத்தில் பட்டாசு வெடிக்க 2 மணி நேரம்மட்டுமே அனுமதி: உச்ச நீதிமன்றம் தீர்ப்பை மீண்டும் உறுதி செய்தது!

4.பள்ளி கல்வி துறைக்கு தனி, 'டிவி' சேனல் - பொங்கல் திருநாளில், சேனல் ஒளிபரப்பு துவக்கம்!

5.5வது முறையாக உலக சாம்பியன் பட்டம் பார்முலா 1 கார் பந்தயத்தில் லூயிஸ் ஹாமில்டன் அசத்தல்

SBI ATM CARD பயன்படுத்துபவரா நீங்கள்..? நாளை முதல் கவனமாக இருங்க..!
எஸ்பிஐ வங்கியின் மேஸ்ட்ரோ மற்றும் கிளாசிக் வகை டெபிட் கார்டுகளில் தினசரி பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு குறைக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நாளை முதல் (அக்டோபர் 31) அமலுக்கு வருகிறது.
எஸ்பிஐ வங்கி மாஸ்டர் டெபிட் கார்டு, மேஸ்ட்ரோ டெபிட் கார்டு, கிளாசி டெபிட் கார்டு என பலவகையான டெபிட் கார்டுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. வங்கிக் கணக்கில் பணம் இருக்கும்பட்சத்தில் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி ஏடிஎம் வழியாக நாம் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். மேலும் பணமில்லா பரிவர்த்தனைக்கும் டெபிட் கார்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.இதனிடையே எஸ்பிஐ வங்கியின் மேஸ்ட்ரோ மற்றும் கிளாசிக் வகை டெபிட் கார்டுகளில் தினசரி பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு குறைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எஸ்பிஐ வங்கி கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி மேஸ்ட்ரோ மற்றும் கிளாசிக் வகை டெபிட் கார்டுகளில் தினசரி பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு 40,000 ரூபாயிலிருந்து 20,000 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நாளை முதல் அதாவது அக்டோபர் 31-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
ஏடிஎம்களில் நடைபெறும் மோசடி பணபரிவர்த்தனையை தடுக்கும் பொருட்டும், டிஜிட்டல், பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் பொருட்டும் எஸ்பிஐ வங்கி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. டெபிட் கார்டுகள் வழியாக தினசரி அதிக பணம் எடுக்க வேண்டும் என நினைப்பவர்கள் எஸ்பிஐ வங்கியின் உயர்வரம்பு கொண்டு டெபிட் கார்டுகளுக்கு மாறவும் வாடிக்கையாளர்களை எஸ்பிஐ கேட்டுக்கொண்டுள்ளது.
எஸ்பிஐ வங்கி மீது ஏற்கனவே வாடிக்கையாளர்கள் பல வகையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். பெருநகரங்கள், நகரங்களில் எஸ்பிஐ கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகையாக ரூபாய் 3000 வங்கிக் கணக்கில் வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும். இதேபோன்று எஸ்பிஐ ஏடிம் கார்டை பயன்படுத்தி எஸ்பிஐ ஏடிம்களில் மாதத்திற்கு 5 முறை மட்டுமே பணம் எடுக்க முடியும். மீறி எடுக்கும்பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும். அதேசமயம் எஸ்பிஐ கார்டை மற்ற வங்கியின் ஏடிஎம்களில் பயன்படுத்தினால் மாதத்திற்கு மூன்று முறை மட்டுமே கட்டணம் இல்லாமல் பணம் எடுக்க முடியும். 
இதுபோன்ற கடுமையான அறிவிப்புகளால் எஸ்பிஐ மீது ஏற்கனவே வாடிக்கையாளர்கள் அதிருப்தியில் இருக்கும் நிலையில் எஸ்பிஐயின் புதிய அறிவிப்பு வாடிக்கையாளர்களை மேலும் அதிருப்தி அடைய வைத்துள்ளது.

1474 முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப கல்வித்துறை முடிவு


தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப ஒப்பந்த அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ஒப்பந்த அடிப்படையில் தமிழக அரசில் ஆசிரியர் பணி!

தமிழகத்தில் 32 மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் பல்வேறு ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றினை நிரப்பும் வகையில் முதற்கட்டமாக 1,474 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்குத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, ஆறு மாதத்திற்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இப்பணியிடங்களுக்கு அடிப்படை பாடப்பிரிவுகளான தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், உயிரியல், தாவரவியல், வேதியியல், வரலாறு வணிகவியல், விலங்கியல், பொருளியல் உட்பட 11 பாடப்பிரிவுகளில் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இது குறித்து மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பிக்கவும் அருகில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

நாளை 31.10.2018 பள்ளியில் எடுக்க வேண்டிய உறுதி மொழி

pledge-on-sardar-vallabhai-patel's-birthday

அரசுப் பள்ளிகளில் விரைவில் எல்.கே.ஜி அறிமுகம்! ஆபத்தா, ஆரோக்கியமானதா?
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் வரும் ஜனவரி மாதத்திலிருந்து எல்.கே.ஜி எனப்படும் மழலையர் பாடத்திட்டத்தைத் தொடங்கி, கல்வி கற்பிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்புதல் பெறவுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார்.
மூன்று வயது நிறைவடைந்த குழந்தைகளை எல்.கே.ஜி -யில் சேர்க்க வேண்டுமானால் முன்பெல்லாம் பெற்றோர் தங்கள் வீட்டுக் அருகிலுள்ள சிறிய பள்ளிக்கூடத்தில் சேர்ப்பார்கள். சென்ற தலைமுறையினர் அப்படித்தான் கல்விப் பயணத்தைத் தொடங்கினார்கள். ஆனால், அண்மைக்காலங்களில் எல்.கே.ஜி வகுப்பிற்கே பல ஆயிரம் ரூபாய் ஏன், லட்சக்கணக்கில்கூட செலவிடும் போக்கு உருவாகி இருக்கிறது. இதுபோன்ற அதிக பணம் செலவழித்து எல்.கே.ஜி.. படிப்பில் சேர்ப்பதற்கு தங்கள் குழந்தைகளின் கல்வி மீதான பெற்றோரின் அக்கறை ஒருபுறம் என்றாலும், உறவினர்கள் மற்றும் தங்கள் வீடுகளைச் சுற்றி வசிப்பவர்கள் உருவாக்கும் சமூக அழுத்தமும் ஒரு காரணமாகப் பார்க்கப்படுகிறது. அதிக வருவாய் ஈட்டாத ஏழை, எளிய மற்றும் நடுத்தரக் குடும்பத்தினர்கூட, தங்கள் பிள்ளைகளின் எல்.கே.ஜி. வகுப்புக்காக நிறைய செலவிட்டுப் படிக்க வைக்கும் நிலை உள்ளது.  இந்தச் சூழலில் தமிழக அரசே எல்.கே.ஜி படிப்பை அறிமுகம் செய்து கல்வி கற்பிக்க முன்வந்திருப்பது பள்ளிக்கல்வித் துறையில் ஓர் ஆரோக்கியமான விஷயமே. அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிகையை அதிகப்படுத்தும் ஒரு முயற்சியாகவும் இதைப் பார்க்கலாம்.
``எல்.கே.ஜி. படிப்பை தமிழக அரசு அறிமுகம் செய்து, பாடங்களை நடத்தவிருப்பது வரவேற்கத்தக்க விஷயம். ஜனவரி முதல் தேதியிலிருந்து, அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி. படிப்பை ஆரம்பிக்கலாம் என்று அரசு முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. இந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்துவதற்கு முன் சில விஷயங்களை சுட்டிக்காட்டுவது என்னுடைய கடமை என்று நினைக்கிறேன்.
`மாணவர்கள் ஆங்கிலம் கற்க வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளனர். ஆகவே, ஆங்கிலவழியிலும் பாடம் சொல்லிக் கொடுக்கப்படும்' என அமைச்சர் செங்கோட்டையன் சொல்லி இருக்கிறார். இது தவறானது, ஆபத்தானதும்கூட. தங்கள் பிள்ளைகள் நன்றாக ஆங்கிலம் பேசவேண்டும் என்றுதான் பெற்றோர் விரும்புகிறார்களே அன்றி, ஆங்கிலவழிக் கல்வியிலேயே பாடம் கற்க வேண்டும் என்று அல்ல. `அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன்'படி தாய்மொழி வழிக் கல்வியில்தான் பாடம் கற்பிக்க வேண்டுமென்ற விதிமுறை இருக்கிறது. அந்தச் சட்டத்தை தமிழக அரசாங்கம் பின்பற்ற வேண்டும். கோத்தாரி கமிஷனும், முத்துக்குமார் கமிஷனும் தாய்மொழி வழிக் கல்வியைத்தான் வலியுறுத்துகின்றன.
  ஆங்கிலத்தில் பாடம் கற்பிக்கப்படும் என்றால் தாய்மொழிக் கல்வி அவசியம் இல்லை' என்றுதானே அர்த்தம். ஜெயலலிதா கொண்டுவந்த சட்டத்தை, இப்போது அமைச்சராக இருக்கும் செங்கோட்டையன் மீறுகிறார் என்று எடுத்துக் கொள்ளலாமா?
`மூன்றே மாதத்தில் ஆங்கிலம் கற்றுக்கொள்ளலாம்' என்று எத்தனையோ பயிற்சிக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால், 10 வருடத்துக்கு மேல் பள்ளியில் தொடர்ச்சியாக ஆங்கிலத்தை ஒரு பாடமாக படிக்கும் மாணவர்களில் இன்னும் பலர் அந்த மொழியில் சரியாக எழுதவோ, பேசவோ முடியாத நிலை இருக்கிறதே, இது எவ்வளவு பெரிய முரண். ஆசிரியர்கள் அந்தளவுக்கு மோசமாகப் பாடம் கற்பித்துக் கொடுக்கிறார்கள். இந்த நிலையில் ஆங்கிலத்திலேயே அறிவியல், கணக்கு போன்ற பாடங்களைக் குழந்தைகள் படிக்க ஆரம்பித்தால் என்னவாகும், அந்த அளவுக்குத் தரமாக எல்லாப் பாடங்களையும் கற்றுத்தரும் அளவுக்கு ஆசிரியர்கள் அரசுப் பள்ளியில் இருக்கிறார்களா என்பதையும் பார்க்கவேண்டும்.
ஆக, சட்டபூர்வமாகவும், தர்க்கரீதியாகவும் ஆங்கில வழிக் கல்வி சாத்தியம் இல்லாதது. ஆங்கிலமே வேண்டாமென்று சொல்லவில்லை. அதையொரு பாடமாக வைத்துக் கொள்ளட்டும். ஆனால், அந்த மொழியிலேயே அனைத்துப் பாடங்களையும் கற்பிப்பது, மாணவர்களின் சிந்தனைத்திறனை மழுங்கடிக்கச் செய்யும். இன்னொருபுறம், அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி. ஆரம்பிப்பதற்கு முன் அதற்கான சூழலை உருவாக்குவது கட்டாயம். அதற்குப் பிறகே எல்.கே.ஜி. படிப்பில் பிள்ளைகளைச் சேர்க்க வேண்டும். குறைந்தது பத்துக் குழந்தைகளுக்கு தலா ஒரு ஆயா, ஒரு ஆசிரியர் அவசியம். 24 மணிநேரமும் தண்ணிர் இருக்கக்கூடிய வகையில் கழிப்பறை வசதி, குழந்தைகள் ஒன்றரை மணி நேரம் தூங்குவதற்கான சூழல் என எல்.கே.ஜி. குழந்தைகளுக்கான கல்விக்கூடங்களுக்கு என்று சில பிரத்யேகச் சூழல் தேவை.
ஏற்கெனவே இருக்கும் அங்கன்வாடிகளை மழலையர் கல்விக்கூடம் என்று மாற்றிவிடக் கூடாது. அவை எப்போதும்போல் அதற்கான நோக்கத்துடன் மட்டும் தனியாக இயங்க வேண்டும். சட்டத்தில் இருக்கும் தாய்மொழிக் கல்வித்திட்டத்தையும், குழந்தைகள் எல்.கே.ஜி. பயில்வதற்கான சரியான சூழலையும் உத்தரவாதம் செய்து பின்னரே அரசுப் பள்ளிகளில் மழலையர் கல்வியை அரசு தொடங்க வேண்டும். அதுவே நாட்டுக்கு நல்ல எதிர்காலம் உருவாவதற்கான அடிப்படையாக அமையும்" என்றார்.

C, D தரநிலை மாணவர்களுக்கான ஆண்டு செயல் திட்ட பதிவேடு

annual project report for c and d grade students of tamilnadu govt school[TN 12th ATTEMPT RESULT] 12ம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு


12ம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள் நாளை பிற்பகல் வெளியீடு - தேர்வுத்துறை அறிவிப்பு.

 www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.

பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க 10 ஆலோசனைகளைச் சொல்லும் பள்ளிக் கல்வித் துறை!

தமிழக பள்ளிக் கல்வித் துறை, பள்ளி மாணவர்கள் பாதுகாப்பாக எவ்வாறு பட்டாசு வெடிக்க வேண்டும் என்பதுகுறித்த ஆலோசனையை வழங்கியுள்ளது.  இதைத் தலைமை ஆசிரியர்கள் அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் தெரிவித்து, விழிப்பு உணர்வை ஏற்படுத்திட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

தீபாவளி பள்ளிக்கல்வித் துறை

தீபாவளிக்கு முன் தினமான திங்கள்கிழமை அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது தமிழக அரசு. தீபாவளிப் பண்டிகையின்போது மாணவர்களுக்குத் தீ விபத்துப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில், ஒவ்வொரு பள்ளியின் தலைமையாசிரியரும் காலையில் இறை வணக்கக் கூட்டத்தில் பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பதுகுறித்து மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கிட வேண்டும். இதை, அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் மாவட்டக் கல்வி அலுவலர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது பள்ளிக் கல்வித் துறை.


பாதுகாப்பாகப் பட்டாசு வெடிப்பதுகுறித்து  10 ஆலோசனைகளை வழங்கியுள்ளது.

1. குழந்தைகள், பெற்றோர்களின் முன்னிலையில் அவர்களது பாதுகாப்பின் கீழ் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். இளம் சிறார்கள் வெடிகளைக் கொளுத்த அனுமதிக்கக் கூடாது.

2. பட்டாசு கொளுத்தும்போது, தளர்வான ஆடைகள் உடுத்துவதைத் தவிர்க்க வேண்டும். பட்டாசு வெடிக்கும்போது, டெரிகாட்டன் / டெரிலின் ஆகிய எளிதில் பற்றக்கூடிய ஆடைகளை அணியக் கூடாது.

3. பட்டாசு கொளுத்துமிடத்துக்கு அருகில் ஒரு வாளியில் தண்ணீரையோ அல்லது மணலையோ வைத்துக்கொள்ளுங்கள்.

4. பட்டாசை கையில் வைத்துக்கொண்டோ அல்லது உடலுக்கு அருகிலோ வைத்து பற்றவைக்கக் கூடாது. மாறாக, பாதுகாப்பான தொலைவில் வைத்தே வெடியுங்கள். வெடிக்காத பட்டாசுகளைக் குனிந்து பரிசோதிப்பதைத் தவிர்த்தல் வேண்டும்.

5. மூடிய பெட்டிகளில் அல்லது பாட்டில்களின் மேல் வைத்து பட்டாசுகளை வெடிக்கச் செய்யாதீர்கள். கண்ணாடிப் பொருள்கள் வெடித்து கண்களில் பட்டு, கண் பார்வை பாதிப்படையக் கூடும்.

6. ராக்கெட்டுகளை குடிசைகள் இல்லாத வெட்ட வெளிப்  பகுதிகளில் மட்டுமே செலுத்துங்கள்.

7. பட்டாசுகளை மக்கள் அதிகமாகக் கூடும் பகுதிகளிலும், தெருக்களிலும் மற்றும் சாலைகளிலும் வெடிக்கக் கூடாது. பட்டாசுகளை விற்பனைசெய்யும் கடைக்கு முன்பகுதியிலோ அல்லது அருகிலோ வெடிக்கக் கூடாது. பெட்ரோல் சேமித்து வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு அருகிலோ அல்லது பெட்ரோல் எரிபொருள் கடைகளுக்கு முன்போ, பட்டாசுகளை வெடிக்கவோ கொளுத்தவோ கூடாது.

8. மருத்துவமனைக்கு அருகிலும், முதியோர் இல்லங்களுக்கு அருகிலும் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிருங்கள்.

9. விலங்குகளைத் துன்புறுத்தும் வகையிலும், அவை பயப்படும் வகையிலும் பட்டாசுகளை வெடிக்காதீர்கள்.

10. அதிக சப்தமுள்ள பட்டாசுகளை வெடிக்க வேண்டாம். ஏனெனில், அது உடலையும் மனநிலையையும் பாதிக்கும். காதுகள் பாதிக்கப்படக்கூடும். ஒரு நாள் கொண்டாட்டத்திற்காக வாழ்நாள் முழுவதும் துன்பப்பட வேண்டாம்' என்று  கல்வித்துறை ஆலோசனை வழங்கியுள்ளது.
Kalvisiragukal
தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் ஒரு வார கால இடைவெளி மட்டுமே உள்ளது. இந்த நிலையில், தீபாவளி கொண்டாட்டத்தின்போது ஏற்படும் விபத்துகளைத் தவிர்க்கும் வகையில், பள்ளிகளில் விழிப்பு உணர்வு செயல்முறைக் காட்சிகள் செய்தும், பொது இடங்களில்  மாணவ மாணவிகள் கலந்துகொண்டு பேரணிகள், தீ விபத்து தடுப்பு மற்றும் பாதுகாப்புகுறித்து, தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை அலுவலர்களைக் கொண்டு விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது பள்ளிக்கல்வித் துறை.

பாதுகாப்பான முறையில் கொண்டாடுவோம்! விபத்துகளைத் தடுப்போம்

WORKDONE REGISTER - GENERAL FORMATWORKDONE REGISTER - GENERAL FORMAT


Click here to download

Science Fact - குளிர் காலக் காலை நேரங்களில் மோட்டார் கார்களை ஓட்டத்துவக்குவதற்கு சிரமப்பட வேண்டியிருப்பது ஏன்?


மோட்டார் கார் போன்ற தானியங்கிகள்(automobiles) ஓடுவதற்கு, உள் எரிப் பொறிகள் (internal combustionengines) இன்றியமையதவை.

இப்பொறியில் உள்ள மூடிய கொள்கலனுள் (chamber) பெட்ரோல், டாசல் போன்ற எரி பொருளும் காற்றும் கலந்த கலவையானது மிகுந்த அழுத்தத்தில் வெடிப்பொலியுடன் பற்றவைத்து எரியூட்டப்படுகிறது. இதனால் உள்ளேயிருக்கும் உந்துதண்டானது (piston) கீழே தள்ளப்படும். இந்த நிகழ்ச்சி தொடர்ச்சியாக பல கொள்கலன்களுள் நடைபெறுகிறது.

இதன் காரணமாக அங்குள்ள சுழல் தண்டானது(shaft) சுழல்வதுடன், அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் சக்கரங்களும் சுழல ஆரம்பித்து, அதனால் காரும் ஓடத்துவங்குகிறது. எரிபொருளும் காற்றும் கலந்த கலவையானது எரியூடப்படுவதற்குப் பல காரணங்களிருப்பினும் அவற்றுள் வெப்பநிலை முக்கியமான ஒன்றாகும். குளிர்காலக் காலைப்பொழுதில் காரின் எஞ்சின் பகுதி மிகவும் குளிர்ச்சியாக இருப்பதால் உள்ளே எரிபொருளைப் பற்றவைப்பதற்குத் தேவையான வெப்பநிலையை அடையச் சிறிது நேரம் தேவைப்படுகிறது. இதன் காரணமாக காரை ஓட்டத்துவங்குவதற்குச் சற்று சிரமப் படவேண்டியுள்ளது.

இந்நிலை குளிர்ப்பகுதிகளில் மிகச் சாதாரணமாகக் காணக்கூடியதாகும். மிகவும் குளிர்ந்த பகுதிகளில் இந்நிலையைச் சமாளிக்கும் பொருட்டு குறைந்த வெப்பநிலையில் எரியூட்டப்படக்கூடிய ஹைட்ரோகார்பன் சேர்ந்த பெட்ரோலைப் பயன் படுத்தி குறைவான வெப்பநிலையில் காரை ஓடத்துவங்கும்படிச் செய்கின்றனர்.

தடுமாறும் தொடக்கக்கல்வியை தூக்கி நிறுத்த நர்சரி பள்ளிகளாகும் அங்கன்வாடி மையங்கள்


தமிழகத்தில் தடுமாறும் தொடக்கக்கல்வியை தூக்கி நிறுத்த 2 ஆயிரம் அங்கன்வாடி மையங்கள் நர்சரி பள்ளிகளாக மாறுகின்றன.தமிழகத்தில் பள்ளிக்கல்வியின் தரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஸ்மார்ட் வகுப்பறைகள், ஆசிரியர்களுக்கு டேப்லெட் என அடுத்தடுத்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை தொடர்ந்து 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ஒரே வளாகத்தில் பயிலும் வகையில் மாதிரி பள்ளிகளும் ஏற்படுத்த தமிழக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.அந்த வகையில் தடுமாறும் தொடக்கக்கல்வியை தூக்கி நிறுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் 2 ஆயிரம் அங்கன்வாடி மையங்களில் பிரீகேஜி, எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது

தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் ஒதுக்க முடியாது - உச்சநீதிமன்றதமிழக அரசு தொடர்ந்த வழக்கை
விசாரித்த உச்சநீதிமன்றம் உத்தரவு
"பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி, நேரத்தை மாநில அரசு தீர்மானிக்கலாம்

TNPSC - தமிழக வேளாண் துறையில் தோட்டக்கலை அதிகாரி பணிகள்

Tnpsc horticulture recruitment 2018

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) தமிழக வேளாண் துறையில் தோட்டக்கலை உதவி இயக்குனர், தோட்டக்கலை அதிகாரி போன்ற பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரி உள்ளது.

மொத்தம் 175 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். உதவி இயக்குனர் பணிக்கு 74 இடங்களும், தோட்டக்கலை அதிகாரி பணிக்கு 101 இடங்களும் உள்ளன.இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...

மேலும் இது போன்ற அரசு வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களுக்கு www.arasuvelai.com என்ற இணையதளத்தை பார்வையிடவும்

வயது வரம்பு

விண்ணப்பதாரர் 1-7-2018-ந் தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், எம்.பி.சி., டி.சி., பி.சி. பி.சி.எம். மற்றும் விதவைப் பெண்மணிகள் போன்றோருக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை.

கல்வித்தகுதி

எம்.எஸ்சி. (தோட்டக்கலை) படிப்பு படித்தவர்கள் உதவி இயக்குனர் பணிக்கும், பி.எஸ்சி. தோட்டக்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் தோட்டக்கலை அதிகாரி பணிக்கும் விண்ணப்பிக்கலாம்.

கட்டணம்

விண்ணப்பதாரர்கள் தேர்வுக் கட்டணமாக ரூ.200 மற்றும் விண்ணப்ப பதிவு கட்டணமாக ரூ.150 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். ஒன்டைம் ரிஜிஸ்ட்ரேசன் முறையில் விண்ணப்பிப்பவர்கள் தேர்வுக் கட்டணம் மட்டும் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணத்தில் விதிவிலக்கு அளிக்கப்படுகிறது. நெட்பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிடட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம். சில வங்கிகளின் மூலமாகவும் செலுத்த முடியும்.

தேர்வு செய்யும் முறை

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். சென்னை, மதுரை, கோவையில் மட்டும் இதற்கான தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசிநாள் 21-11-2018-ந் தேதியாகும். வங்கி வழியே கட்டணம் செலுத்த கடைசிநாள் 23-11-2018-ந் தேதியாகும். இதற்கான தேர்வுகள் வருகிற ஜனவரி 12,13-ந் தேதிகளில் நடைபெறுகிறது.

இது பற்றிய விரிவான விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

மேலும் இது போன்ற அரசு வேலை வாய்ப்பு பற்றிய தகவல்களுக்கு www.arasuvelai.com என்ற இணையதளத்தை பார்வையிடவும்

2019 -பொங்கலுக்கு ஒன்பது நாள் விடுமுறை????தமிழக அரசு, 2019ல், நடப்பு ஆண்டை போல, 23 நாட்களை, பொது விடுமுறை நாட்களாக அறிவித்துள்ளது.

தமிழக அரசு, 2015ல், 24 நாட்கள்; 2016ல், 23; 2017ல், 22; 2018ல், 23 நாட்களை பொது விடுமுறை நாட்களாக அறிவித்திருந்தது. அடுத்த, 2019ம் ஆண்டிற்கும், நடப்பு ஆண்டை போல, 23 நாட்களை, பொது விடுமுறை நாட்களாக அறிவித்துள்ளது.பொது விடுமுறை நாட்களில், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள, அனைத்து அலுவலகங்களும் மூடப்பட வேண்டும். அனைத்து சனி, ஞாயிற்று கிழமைகளும், விடுமுறை நாட்கள். மூன்று ஞாயிறு, இரண்டு சனிக்கிழமைகளிலும், பொது விடுமுறை வருகிறது.ஜனவரியில், மூன்று நாட்கள்; அக்டோபரில், இரண்டு நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. அரசு அறிவித்துள்ள, பொது விடுமுறை நாட்களில், சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளை கழித்தால், 18 நாட்கள், பொது விடுமுறை நாட்களாக உள்ளன.

அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி : ஆயுத பூஜை திங்கள் கிழமை, விஜயதசமி செவ்வாய் கிழமை வருவதால், சனி, ஞாயிறு சேர்த்து, நான்கு நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது. இது, அரசு ஊழியர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், தீபாவளி ஞாயிறன்று வருவது, ஏமாற்றத்தை அளித்துள்ளது.

பொங்கலுக்கு ஒன்பது நாள் விடுமுறை? :

அடுத்தாண்டு, பொங்கல் பண்டிகை, ஜன., 15 முதல், 17 வரை கொண்டாடப்படுகிறது. இதற்கு, செவ்வாய் முதல் வியாழன் வரை, மூன்று நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.ஜன., 12ல், தேசிய இளைஞர் தின விடுமுறை. நடுவில், ஜன., 14 திங்கள் மற்றும் ஜன., 18 வெள்ளி என, இரு நாட்கள் வேலைநாட்களாக உள்ளது.எனவே, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை குளிர்விக்கும் வகையில், தமிழக அரசு ஜன., 14, 18 என, இரு நாட்களும் உள்ளூர் விடுமுறை அறிவித்தால், அரசு ஊழியர்களுக்கு, தொடர்ந்து, ஒன்பது நாட்கள் விடுமுறை கிடைக்கும். இதை அரசு பரிசீலிக்குமா என, ஊழியர்கள் இப்போதே கோரிக்கை விடுத்துள்ளனர்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேச பயிற்சி அளிக்கக் கோரி மனு: அரசு பதிலளிக்க உத்தரவு
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் சரளமாகப் பேச பயிற்சி அளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு, பள்ளிக் கல்வித் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு விவரம்: தமிழகத்தில் 37, 211 அரசுப் பள்ளிகள், 8,403 அரசு உதவி பெறும் பள்ளிகள், 12,419 தனியார் (சிபிஎஸ்இ மற்றும் மெட்ரிகுலேஷன்) பள்ளிகள் உள்ளன. இந்தப்பள்ளிக்கூடங்களில் சுமார் 1.25 கோடி மாணவர்கள் படித்து வருகின்றனர்.
ரூ.27,000 கோடி: தனியார் பள்ளிகளில் மட்டும் சுமார் 40 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். தமிழக அரசு கல்விக்காக ஆண்டுக்கு சுமார் ரூ.27,000 கோடி செலவிடுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இரண்டாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, தமிழக அரசின் கல்விக் கொள்கையின்படி முதல் மொழிப்பாடமாக தமிழும், இரண்டாவது மொழிப்பாடமாக ஆங்கிலமும் கற்பிக்கப்படுகிறது.
தமிழ் வழியில் படிக்கும் மாணவர்கள் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றாலும், அவர்களால் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் முடிவதில்லை. உயர் கல்வியில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட பாடங்கள் ஆங்கிலத்தில் கற்பிக்கப்படுகின்றன. இதனால், தமிழ் வழியில் படித்த மாணவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
இவற்றைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு கடந்த 1991 -ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணையின் அடிப்படையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி தொடங்கப்பட்டன. மேலும், இந்த பள்ளிக்கூடங்களில் 50 சதவீதம் ஆங்கில வழியில் கல்வி கற்பிக்க அனுமதி வழங்கி கடந்த ஜூலை மாதம் தமிழக அரசு மற்றொரு அரசாணையைப் பிறப்பித்தது.
ஆனால், இந்த விவரங்கள் தெரியாமல் தனியார் பள்ளிகளுக்குச் செல்லும் பெற்றோர், கல்விக்காக ஒரு குழந்தைக்கு பல லட்சம் ரூபாய் செலவழிக்கின்றனர். தமிழ் வழியில் இரண்டாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலம் சரளமாக பேசும் (ஸ்போக்கன் இங்கிலீஷ்) பயிற்சி வழங்க வேண்டும். அரசு பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் தொடங்க வேண்டும் என கோரி அரசுக்கு மனு அளித்தேன். அந்த மனுவுக்கு இதுவரை பதில் அளிக்கவில்லை. எனது கோரிக்கைகளை பரிசீலிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் எத்தனை அரசு, ,அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் நடத்தும் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி கற்பிக்கப்படுகிறது என்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகத்தின் சட்ட அதிகாரி சி.நாகராஜன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
மேலும், அரசு பிறப்பித்த அரசாணையின் அடிப்பைடையில் ஆங்கில வழிக் கல்வி எத்தனை பள்ளிக்கூடங்களில் தொடங்கப்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்களை பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்

கணினி ஆசிரியர் பணிக்கு முதுநிலை படிப்பு கட்டாயம்
அரசு பள்ளிகளில், கணினி ஆசிரியர் பணியில் சேர, இனி, முதுநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்' என, பள்ளி கல்வித்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது. இதற்கு, ஏற்கனவே உள்ள ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.அரசு பள்ளிகளில், 1994ல், கணினி அறிவியல் படிப்பு அறிமுகம் செய்யப்பட்டது. முதலில், கணினி அறிவியல் சார்ந்த, 'டிப்ளமா' படித்தவர்கள், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கு, கணினி பயிற்றுனர்களாக நியமிக்கப்பட்டனர். 


அதன்பின், பி.எஸ்.சி., கணினி அறிவியல் பாடம் அறிமுகமானதால், பி.எஸ்.சி., - பி.எட்., முடித்தவர்கள், கணினி பயிற்றுனர்களாக நியமிக்கப் பட்டனர்.இந்த அடிப்படையில், 765 ஆசிரியர்கள், தற்போது பணியாற்றுகின்றனர். ஆனால், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடம் நடத்த, முதுநிலை ஆசிரியர்களையே நியமிக்க வேண்டும் என்ற விதி உள்ளதால், கணினி ஆசிரியர் நியமனத்தில், தமிழக அரசு, புதிய முடிவு எடுத்துள்ளது.அதன்படி, தற்போது, 809 காலியிடங்களை நிரப்ப, முதுநிலை படித்தவர்களையே தேர்வு செய்ய வேண்டும் என, பள்ளி கல்வி செயலகம் உத்தரவிட்டுள்ளது.  
இந்த முடிவுக்கு, ஏற்கனவே உள்ள ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துஉள்ளனர். அவர்கள், மேல்நிலை பள்ளி முதுநிலை கணினி ஆசிரியர்கள் சங்க பொதுச்செயலர் பரசுராமன் தலைமையில், நேற்று பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.ஆனால், அதிகாரிகள் கூறியதாவது:பட்டப்படிப்பு முடிக்காதவர்கள், பல ஆண்டுகளாக, கணினி ஆசிரியர்களாக பணியாற்றினர். பட்டப்படிப்பு அறிமுகமானதும், புதிதாக பட்டப்படிப்பு முடித்தவர்கள் நியமிக்கப்பட்டனர். அதேபோல, தற்போது, முதுநிலை படிப்பு முடித்தவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஏற்கனவே பட்டப்படிப்பு கல்வி தகுதி யுடன் பணி பெற்றவர்களுக்கு, முதுநிலை அந்தஸ்து வழங்க வாய்ப்பில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.